ஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்…

by Nila | February 15, 2018 12:37 am

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் `பியார் பிரேமா காதல்’.

இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நாளை வெளியிடப்பபோவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் அந்த மோஷன் போஸ்டரில் பல இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக ஹரிஷ் கல்யாண் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வரும் என்று

Source URL: http://newstamiljaffna.com/archives/61