நாடு முழுவதும் கடந்த மாதத்திலிருந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது மோடியின் பாஜக கட்சி.
ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! #சிதம்பரம்— pa.ranjith (@beemji) May 23, 2019
ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! #சிதம்பரம்
தமிழகத்தில் எதிர்கட்சியான திமுக 37 தொகுதிகளை பெற்றுள்ளது. இதில் திமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மிகுந்த இழுபறிக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவரது இந்த வெற்றி தான் தற்சமயம் சமூக வலைத்தளம் எங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித், வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்
Comment:*
Nickname*
E-mail*
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.