மீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

by Nila | May 23, 2019 11:21 pm

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதனால் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 37 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக, அதிமுக தவிர்த்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி.

இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் காய்கறி விற்று, மீன் வெட்டி, பரோட்டா போட்டு கவனிக்கத்தக்க நபராக வலம்வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் இரவு 7.30 மணி நிலவரப்படி 30672 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார். அத்தொகுதியில் தொடர்ந்து முதலிடத்தில் திமுக உள்ளது.

Source URL: http://newstamiljaffna.com/archives/563