பணத்தை விட மரியாதை தான் முக்கியம்.. காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்

by Nila | May 19, 2019 3:56 pm

தமிழில் காஞ்சனா சீரிஸ் எவ்வளவு பெரிய ஹிட் என அனைவருக்கும் தெரியும். தற்போது காஞ்சனா படத்தினை ஹிந்தியில் லாரன்ஸ் ரீமேக் செய்துவந்தார்.

லாரன்ஸ் இயக்கத்தில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த ப்ராஜெக்டில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார். இன்று லக்ஷ்மி பாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.

“பணம் புகழை விட மரியாதை தான் முக்கியம். பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை என்னிடம் கூட கூறாமல் வெளியிட்டுவிட்டனர். ஒரு மூன்றாம் நபர் கூறி தான் எனக்கே தெரிந்தது. நான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன். நான் நினைத்தால் கதையை கொடுக்க முடியாது என கூறலாம், ஆனால் அப்படி செய்யப்போவதில்லை. அக்ஷய் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. அவரை சந்தித்து ஸ்கிரிப்ட் ஒப்படைத்துவிட்டு முறையாக விலகுகிறேன்” என லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

Endnotes:
  1. #Laxmmibomb: https://twitter.com/hashtag/Laxmmibomb?src=hash&ref_src=twsrc%5Etfw
  2. @akshaykumar: https://twitter.com/akshaykumar?ref_src=twsrc%5Etfw
  3. @RowdyGabbar: https://twitter.com/RowdyGabbar?ref_src=twsrc%5Etfw
  4. @Advani_Kiara: https://twitter.com/Advani_Kiara?ref_src=twsrc%5Etfw
  5. pic.twitter.com/MXSmY4uOgR: https://t.co/MXSmY4uOgR
  6. May 18, 2019: https://twitter.com/offl_Lawrence/status/1129774545441775618?ref_src=twsrc%5Etfw

Source URL: http://newstamiljaffna.com/archives/470