ஓரமா நில்லு.. கேமராவை மறைத்த செக்யூரிட்டி.. கோபப்பட்டு திட்டிய மோடி.. வைரல் வீடியோ!

ஓரமா நில்லு.. கேமராவை மறைத்த செக்யூரிட்டி.. கோபப்பட்டு திட்டிய மோடி.. வைரல் வீடியோ!
May 19 08:48 2019 Print This Article

கேதார்நாத்: பிரதமர் மோடி தனது பாதுகாவலர் ஒருவரை கோபமாக திட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. பிரதமர் மோடி தற்போது இரண்டு நாள் ஆன்மீக பயணத்தில் இருக்கிறார். லோக்சபா தேர்தல் பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்தது. பிரதமர் மோடி இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஓய்வு எடுத்து வருகிறார்.


அவர் மக்களை சந்திக்கும் போது அதை வீடியோ எடுக்க பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து திசைகளிலும் கேமராக்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மோடியின் பாதுகாவலர் ஒருவர் அவரை பாதுகாப்பதற்காக கொஞ்சம் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

இதனால் ஒரே ஒரு கேமரா மட்டும் அவருக்கு தெரியாமல் இடைஞ்சலாக இருந்தது. இதனால் கடும் கோபம் அடைந்த மோடி, உடனே, அந்த பாதுகாவலரை கோபமாக திட்டினார். அதன்பின் பாதுகாவலர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.