பெங்களுருவில் குண்டுவெடிப்பு… பொலிஸ் தீவிரம்

பெங்களுருவில் குண்டுவெடிப்பு… பொலிஸ் தீவிரம்
May 19 08:44 2019 Print This Article

இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களுருவில் குண்டு வெடித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜராஜேஸ்வரி நகர் எம்எல்ஏ முனிரத்தனம் வீட்டிற்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது வெங்கடேஷ் அப்பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது திடீரென குண்டுவெடித்துள்ளது.

இதன் போது வீடுகள் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பின் தன்மையை தெரிந்துகொள்ள பொலிசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த நகர பொலிஸ் ஆணையர் சுனில் குமார் கூறியதாவது, சம்பவம் இன்று மே 19 காலை 9:15 மணிக்கு நடந்துள்ளது. இதனையடுத்து, இப்பகுதி பொலிஸ் கட்டுபாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தடய அறிவியல் ஆய்வாளர்கள் குழு சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.